Enable Javscript for better performance
ஏதாவது ஒரு துறையில் மாணவர்கள் சாதனை படைக்க வேண்டும்: கூடுதல் காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு- Dinamani

சுடச்சுட

    

    ஏதாவது ஒரு துறையில் மாணவர்கள் சாதனை படைக்க வேண்டும்: கூடுதல் காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு

    By DIN  |   Published on : 08th October 2016 03:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாணவர்கள் ஏதாவது ஒரு துறையில் சாதனை படைக்க வேண்டும் என கூடுதல் காவல் துறை இயக்குநர் முனைவர் சைலேந்திரபாபு மாணவ, மாணவியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
    பரமத்தி வேலூர் வட்டம், பாண்டமங்கலம் அருகே உள்ள விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.
    பரமத்தி வேலூர் நான்கு சாலை அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாணவ, மாணவியருக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் "காத்திருக்கும் கனவுகள்' என்ற தலைப்பில் கூடுதல் காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு கலந்து கொண்டு பேசியதாவது:
    மாணவர்கள் மற்றவர்களைச் சார்ந்து இருக்காமல் தனது சொந்த காலில் நின்று சாதனை படைத்து பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பள்ளிக்கும் பெருமை சேர்க்கும் வகையில் ஏதாவது ஒரு துறையில் சாதனை படைக்க வேண்டும். கல்வி மட்டும் தான் கடைசிவரை நமக்கு உதவ முடியும் என்பதை மாணவச் செல்வங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் தன்னம்பிக்கை, மன உறுதி மற்றும் விடா முயற்சியுடன் செயல்பட்டால் சாதிக்க முடியும் என்ற உறுதியுடன் 12-ஆம் வகுப்பு தேர்வை எதிர்கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.
    முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் அறக்கட்டளைத் தலைவர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். செயலாளர் சுப்பிரமணியம், பொருளாளர் வேலுச்சாமி மற்றும் இயக்குநர்கள் முன்னிலை வகித்தனர். கல்வி இயக்குநர் பழனிச்சாமி வரவேற்றுப் பேசினார். தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai