Enable Javscript for better performance
தீவனத்தில் அமினோ அமிலத்தை சேர்க்க அறிவுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    வெப்பம் அதிகரிப்பு காரணமாக முட்டை உற்பத்தி பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், தீவனத்தில் அமினோ அமிலத்தைச் சேர்க்க வேண்டும் என பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அடுத்த நான்கு நாள்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும், மழைக்கான வாய்ப்பு குறைவு. காற்றின் வேகம் மிதமாக இருக்கும் என்பதால், வெப்ப அளவுகள் சற்று அதிகமாகி, கோழிகளில் வெப்ப அயற்சியை உண்டாக்கும்.
    இதனால் தீவன எடுப்பு குறைந்து, முட்டை உற்பத்தி மற்றும் முட்டை ஓடுகளின் தரமும் குறைய வாய்ப்புள்ளது. எனவே, தீவனத்தில் அதிக அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின் சி போன்றவற்றைச் சேர்த்தும், தண்ணீர் மேலாண்மையை முறையாகக் கடைப்பிடித்தும், உற்பத்தி பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
    கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் கடந்த வாரம் பரிசோதனை செய்யப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும் குடல் புண் மற்றும் இறக்கை அழுகல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
    இதனால் பண்ணையாளர்கள் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் கிளாஸ்டிரியம் கிருமியின் தாக்கம் உள்ளதா எனப் பரிசோதனை செய்து, அதற்கு தகுந்தாற்போல் தீவன மேலாண்மை முறைகளைக் கையாள வேண்டும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai