Enable Javscript for better performance
பரமத்தியில் நிலக்கடலை சாகுபடி குறித்த பயிற்சி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பரமத்தியில் நிலக்கடலை சாகுபடி குறித்த பயிற்சி முகாம்

    By DIN  |   Published on : 11th October 2016 04:43 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Groundnut

     

    பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தி வேளாண்மை துறை சார்பில் நிலக்கடலை சாகுபடி குறித்த பயிற்சி முகாம் வியாழக்கிழமை பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
    பரமத்தி வேளாண்மைத் துறை சார்பில் அம்மா திட்டத்தின் மூலமாக மானாவாரி நிலக்கடலை சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பண்ணைப் பள்ளி பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. பயிற்சி வகுப்பில் விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்களில் (உழவு முதல் அறுவடை வரை) ஏற்படும் சந்தேகங்களைக் கேட்டறிந்தனர்.
    வேட்டாம்பாடி பி.ஜி.பி வேளாண்மை கல்லூரி மாணவர்கள், பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநர் நமச்சிவாயம், வேளாண்மை அலுவலர் ஹேமலதா, அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் நிலக்கடலை சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் விளக்கம் அளித்தனர்.
    இப் பயிற்சியில் பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai