Enable Javscript for better performance
பெண் தற்கொலை முயற்சி- Dinamani

சுடச்சுட

    

    பரமத்தி வேலூர் வட்டம், சோழசிராமணியில் குடும்பத் தகராறு காரணமாக பெண் ஒருவர் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்றது குறித்து ஜேடர்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜேடர்பாளையம் அருகே உள்ள சோழசிராமணி, படவெட்டியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம் (26). இவரது மனைவி சுகன்யா (23). இவர்களுக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகின்றன. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். முருகானந்தம்-சுகன்யா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், வியாழக்கிழமை மதியம் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளதாம். இதில் மனமுடைந்த சுகன்யா மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai