Enable Javscript for better performance
பெரியார் பல்கலை. கல்லூரிகளுக்கு இடையேயான பளு தூக்கும் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    பெரியார் பல்கலை. கல்லூரிகளுக்கு இடையேயான பளு தூக்கும் போட்டி

    By DIN  |   Published on : 08th October 2016 03:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரியில் பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான வலு, பளு தூக்கும் போட்டிகள் மற்றும் ஆணழகன் போட்டிகள் நடைபெற்றன.
    பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரியில் பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான ஆடவர் மற்றும் பெண்களுக்கான வலு, பளு தூக்கும் போட்டிகள் கடந்த செவ்வாய்க்கிழமை துவங்கி, வியாழக்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெற்றன.
    பளு மற்றும் வலு தூக்கும் போட்டியில் 25 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். வலு தூக்கும் போட்டியில் கந்தசாமி கண்டர் கல்லூரி மாணவ, மாணவியர் 4 தங்கப் பதக்கங்களையும், 2 வெள்ளிப் பதக்கங்களையும், ஒரு வெண்கலப் பதக்கத்தையும் பெற்று 56 வெற்றிப் புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்று ஒட்டுமொத்த குழு சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளனர். பளு தூக்கும் போட்டியில் 54 வெற்றிப் புள்ளிகள் பெற்று இரண்டாமிடத்தையும், ஆணழகன் போட்டியில் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர். வெற்றிபெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு கல்லூரித் தலைவர் சோமசுந்தரம், துணைத் தலைவர் நெடுஞ்செழியன், முதல்வர் தங்கராசு, உடற்கல்வி இயக்குநர் சிவக்குமார் ஆகியோர் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai