Enable Javscript for better performance
மாற்றுத் திறனாளிகளுக்கான சிறந்த சேவை விருது: விண்ணப்பிக்க அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    மாற்றுத் திறனாளிகளுக்கான சிறந்த சேவை விருது: விண்ணப்பிக்க அழைப்பு

    By DIN  |   Published on : 08th October 2016 03:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை செய்த நபர்கள், நிறுவனங்கள் மாநில அரசு வழங்கும் விருதினைப் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
    ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தின விழாவாக உலகளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னையில் இவ் விழா டிசம்பர் 3ஆம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாகச் சேவை புரிந்து வருபவர்களுக்கும், நிறுவனங்களுக்கும் தமிழக அரசின் மாநில விருதுகள் வழங்கப்படவுள்ளன.
    மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் பயிற்சி அளித்தமைக்கான சிறந்த நிறுவனத்துக்கான விருது, மாற்றுத் திறனாளிகளில் சிறந்த பணியாளர் மற்றும் சிறந்த சுயதொழில் புரிபவர், மாற்றுத் திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய சிறந்த நிறுவனம், மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வுக்கு சிறப்பாகச் சேவை புரிந்த சிறந்த சமூகப் பணியாளர், மாற்றுத் திறனாளி சிறார்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி மற்றும் கல்வி போதித்த ஆரம்ப கால பயிற்சி மைய சிறப்பாசிரியர் என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. இவ் விருதுகளுக்கான விண்ணப்பங்களை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடமிருந்து பெற்று பூர்த்தி செய்து உரிய சான்றுகளை இணைத்து வரும் 31ஆம் தேதிக்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai