Enable Javscript for better performance
மோட்டார் சைக்கிள்கள் மோதல்: விவசாயி பலி- Dinamani

சுடச்சுட

    

    மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், படுகாயமடைந்த விவசாயிஉயிரிழந்தார்.
    நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே வெட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ்(42), விவசாயி. இவர் வியாழக்கிழமை இரவு நாமக்கல்லில் இருந்து சேலம் சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். புதுச்சத்திரம் அருகே சென்றபோது சின்னமுதலைப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (25) என்பவர் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் நேருக்கு நேர் மோதி, தடுமாறி கீழே விழுந்தனர். காயமடைந்த இருவரையும் மீட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கராஜ் உயிரிழந்தார். கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai