Enable Javscript for better performance
வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள் வாகனச் சோதனை: ரூ.19.58 லட்சம் வரி, அபராதம் வசூல்- Dinamani

சுடச்சுட

    

    வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள் வாகனச் சோதனை: ரூ.19.58 லட்சம் வரி, அபராதம் வசூல்

    By DIN  |   Published on : 08th October 2016 03:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடத்திய வாகனச் சோதனையில் வரி வசூல் மற்றும் விதி மீறல் அபராதம் என ரூ.19,58,572 அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.
    நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் உத்தரவின்படியும், ஈரோடு துணைப் போக்குவரத்து ஆணையர் செ.வேலுசாமி அறிவுறுத்தலின்படியும், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் க.செ.துரைசாமி, கே.ஏ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் த. தாமோதரன், என்.ஆர். சரவணன், முருகேசன், எம். ராஜு, செந்தில்குமார், உமா மகேஸ்வரி, மு. செந்தில்குமார் ஆகியோர் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
    இதில் 3,626 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, 537 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. வரியாக ரூ.5,85,287, இணக்கக் கட்டணம் ரூ.4,97,185 என மொத்தம் ரூ.10,82,472 வசூலிக்கப்பட்டது. மேலும், ரூ.8,76,100 இணக்கக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.
    இந்தச் சோதனையின்போது, 76 வாகனங்களுக்கு அதிக எடை ஏற்றியதற்காக தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. 76 வாகனங்களுக்கு அதிக நீளமாகச் சரக்கு ஏற்றியது, 16 வாகனங்கள் தகுதிச் சான்று இல்லாதது, 67 வாகனங்கள் காப்புச் சான்று இல்லாதது, 21 வாகனங்கள் பதிவெண் சரியாக எழுதாதது, 8 வாகனங்களுக்கு முகப்பு விளக்கில் கருப்பு வில்லை நீக்கம் செய்தது, 28 வாகனங்கள் அதிக வேகம் சென்றது, 42 வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் சென்றது, 39 வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணியாமல் சென்றது, 14 வாகன ஓட்டுநர்கள் செல்லிடப்பேசி பேசிக்கொண்டு வாகனம் இயக்கியது, 35 வாகனங்கள் சிவப்பு பிரதிபலிப்பான் ஒட்டாதது, 15 வாகனங்களுக்கு சிவப்பு விளக்கு பொருத்தாதது போன்ற குற்றங்களுக்கு தணிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டன.
    மேலும், பல்வேறு குற்றங்களுக்காக 33 வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டு, காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், இச் சோதனையின் மூலம் மொத்தம் ரூ.19,58,572 அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.
    வரி செலுத்தாமல் இயக்கும் வாகனங்கள், சரக்கு வாகனத்தில் அதிக ஆட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு சிறை பிடிக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai