Enable Javscript for better performance
வன உயிரின வார விழா பேச்சு, ஓவியப் போட்டி: வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    வன உயிரின வார விழா பேச்சு, ஓவியப் போட்டி: வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு

    By DIN  |   Published on : 08th October 2016 03:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வன உயிரின வார விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
    தேசிய வன உயிரின வார விழாவை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான, பேச்சு, ஓவியம், கட்டுரை மற்றும் விநாடி-வினா போட்டி நாமக்கல்லில் நடத்தப்பட்டது. அதில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
    போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நாமக்கல் கிரீன்பார்க் மெட்ரிக். பள்ளியில் அண்மையில் நடந்தது. மாவட்ட வன அலுவலர் காஞ்சனா தலைமை வகித்தார். போட்டியில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. பள்ளி முதல்வர் சரவணன், மாவட்ட வனச் சரகர்கள் கனகரத்தினம், முரளி, முருகவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai