Enable Javscript for better performance
அக்.17, 18இல் ரயில் மறியல் போராட்டம்: திமுகவினருக்கு அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    அக்.17, 18இல் ரயில் மறியல் போராட்டம்: திமுகவினருக்கு அழைப்பு

    By நாமக்கல்,  |   Published on : 15th October 2016 12:03 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, வரும் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் நடைபெறும் விவசாயிகள் தொடர் ரயில் மறியல் போராட்டத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுகவினர் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று அந்தக் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் பார்.இளங்கோவன் வேண்டுகோள் விடுத்தார்.
     இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில் வரும் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாள்கள் 48 மணி நேரம் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.
     திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் அறிவுரையின்படி, நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் இப்போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள், இளைஞர் அணி, மகளிரணி, மகளிர் தொண்டரணி உள்ளிட்ட பல்வேறு சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அனைவரும் தவறாமல் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai