Enable Javscript for better performance
உலக முட்டை தின விழா: நாமக்கல்லில் 20,000 வேகவைத்த முட்டைகள் விநியோகம்- Dinamani

சுடச்சுட

    

    உலக முட்டை தின விழா: நாமக்கல்லில் 20,000 வேகவைத்த முட்டைகள் விநியோகம்

    By நாமக்கல்,  |   Published on : 15th October 2016 11:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உலக முட்டை தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முட்டைக் கோழி பண்ணையாளர்கள் சம்மேளனம் சார்பில், நோயாளிகள், பொதுமக்களுக்கு 20,000 வேகவைத்த முட்டைகள்
     இலவசமாக வழங்கப்பட்டன.
     ஆண்டுதோறும் அக்டோபர் 14ஆம் தேதி உலக முட்டை தினமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு முட்டைக் கோழி பண்ணையாளர்கள் சம்மேளனம் சார்பில், உலக முட்டை தின விழா நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
     சம்மேளனத் தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை நோயாளிகளுக்கும், முக்கிய இடங்களில், பொதுமக்களுக்கும் இலவசமாக வேகவைத்த முட்டைகள் விநியோகம் செய்யப்பட்டன.
     இதுகுறித்து சம்மேளனத் தலைவர் முத்துசாமி, துணைத் தலைவர் வாங்கிலி சுப்ரமணியன் கூறியது: உலக முட்டை தினத்தை முன்னிட்டு, நாமக்கல் பகுதியில் அரசு மருத்துவமனை நோயாளிகள், பொதுமக்களுக்கு 20,000 வேகவைத்த முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
     முட்டையில் உள்ள சத்துக்கள், உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் பயன்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இலவசமாக முட்டைகள் விநியோகம் செய்யப்படுகின்றன. உலக அளவில் அமெரிக்காவில் ஆண்டுக்கு ஒரு நபர் 400 முட்டை உட்கொள்கிறார். ஆனால் இந்தியாவில் சராசரியாக ஆண்டுக்கு 52 முட்டைகள் மட்டுமே உட்கொள்கிறார். அதனால் முட்டையை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன்மூலம் ஏராளான புரதசத்துக் கிடைக்கிறது என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai