Enable Javscript for better performance
குமாரபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    குமாரபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு

    By குமாரபாளையம்,  |   Published on : 15th October 2016 12:00 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமாரபாளையம் அருகே நூல் வியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து புகுந்த மர்மநபர்கள் 20 பவுன் நகையைத் திருடிச் சென்றனர்.
     குமாரபாளையம் பூலக்காடு கணபதிநகரைச் சேர்ந்தவர் குணசேகரன். நூல் வியாபாரி. இவர் மனைவி அனுராதாவுடன் கடந்த 10-ம் தேதி சென்னையில் உள்ள தனது மகளின் வீட்டுக்குச் சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
     வீட்டினுள் சென்று பார்க்கையில் பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த பொருள்கள் தாறுமாறாக வீசப்பட்டுக் கிடந்தன. மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் தங்க நகை மற்றும் ரொக்கத்தையும் காணவில்லையாம். இதன் மொத்த மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
     இதுகுறித்த தகவலின் பேரில், குமாரபாளையம் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும், வீட்டினுள் பதிவாகியிருந்த மர்மநபர்களின் விரல்ரேகைகளை தடய அறிவியல் துறையினர் சேகரித்தனர். மோப்ப நாய் உதவியுடன் திருடர்களைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
     கடந்த சில நாள்களுக்கு முன்னர் இதே பகுதியில் பெண்களை ஏமாற்றி பணம், நகையைப் பறித்துச் சென்றதாகக் கூறப்படும் நிலையில், தற்போது வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai