Enable Javscript for better performance
போக்குவரத்து விதிகளை மீறிய 96 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.1.90 லட்சம் அபராதம்- Dinamani

சுடச்சுட

    

    போக்குவரத்து விதிகளை மீறிய 96 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.1.90 லட்சம் அபராதம்

    By நாமக்கல்,  |   Published on : 15th October 2016 12:03 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 5 நாள்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 96 ஆம்னி பேருந்துகளுக்கு வட்டாரப் போக்குவரத்து துறையினர் ரூ.1.90 லட்சம் அராதம் விதித்தனர்.
     தமிழகத்தில் ஆயுத பூஜை, விஜயதசமி, மொகரம் பண்டிகை என அடுத்தடுத்து அரசு விடுமுறை நாள்கள் வந்ததால், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரண்டு மடங்கு உயர்த்தி வசூல் செய்யப்பட்டது.
     இதுகுறித்து போக்குவரத்துத் துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, சிறப்பு சோதனை நடத்தி போக்குவரத்து விதிமுறைகளை மீறும் சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர்.
     அதன்படி, ஈரோடு துணை போக்குவரத்து ஆணையர் வேலுசாமி உத்தரவின் பேரில், நாமக்கல் தெற்கு, வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் துரைசாமி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தாமோதரன், ராஜா, சரவணன், செந்தில்குமார், முருகேசன், உமாமகேஸ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் கடந்த 8ஆம் தேதி இரவு முதல் 13ஆம் தேதி அதிகாலை வரை நாமக்கல் கீரம்பூர் சுங்கச்சாவடி பகுதியில் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
     அப்போது ஆம்னி பேருந்து பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா, பேருந்துகளில் உரிமம் புதுப்பிக்கப்பட்டுள்ளதா, பயணிகளை தவிர சரக்குகள் ஏற்றி செல்லப்படுகிறதா என போக்குவரத்து விதிமீறல் குறித்து சோதனை செய்தனர்.
     கடந்த 5 நாள்களில் 500-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளில் சோதனை செய்யப்பட்டது. வரி செலுத்தாமல் இயக்கிய 3 வெளி மாநில ஆம்னி பேருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, ரூ.88,470 வரி வசூல் செய்யப்பட்டது. மேலும், விதிமுறைகளை மீறிய 96 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.1.90 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது. அதேபோல, அதிக சுமை ஏற்றிய 31 சரக்கு வாகனங்கள், அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற 29 வாகனங்கள் என 60 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை அளிக்கப்பட்டது.
     அதற்கான இணக்கக் கட்டணமாக ரூ.5,05,300 நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த சிறப்பு சோதனையில் 247 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டதுடன், மொத்தம் ரூ.7,83,770 வசூல் செய்யப்பட்டது.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai