Enable Javscript for better performance
மரவள்ளிக் கிழங்கின் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை- Dinamani

சுடச்சுட

    

    மரவள்ளிக் கிழங்கின் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

    By பரமத்தி வேலூர்,  |   Published on : 15th October 2016 12:02 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்திவேலூர் வட்டத்தில் மரவள்ளிக் கிழங்கின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், மரவள்ளி பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
     பரமத்திவேலூர் வட்டத்தில் எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் விளையும் மரவள்ளிக் கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.
     கிழங்கு ஆலையில் மரவள்ளிக் கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளிக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் ஜவ்வரிசி தயார் செய்யப்படும் மரவள்ளிக் கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.9 ஆயிரம் வரையிலும், சிப்ஸ் தயார் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் மரவள்ளி டன் ஒன்று ரூ.11 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
     இந்த வாரம் ஜவ்வரிசி தயார் செய்யப்படும் மரவள்ளிக் கிழங்கு டன் ஒன்று ரூ.8 ஆயிரத்து 200-க்கும், சிப்ஸ் தயார் செய்வதற்காக பயன்படுத்தப்படும் மரவள்ளிக் கிழங்கு டன் ஒன்று ரூ.10 ஆயிரத்துக்கும் விற்பனையானது. மரவள்ளிக் கிழங்கின் வரத்து அதிகமானதால் விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் மரவள்ளி பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai