சுடச்சுட

    

     குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க ஒத்துழைக்க வேண்டுகோள்

    By DIN  |   Published on : 04th September 2016 11:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டம், குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாவட்டமாக திகழ வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் அறிவுறுத்தினார்.
     நாமக்கல் மாவட்ட குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, ஆதரவுச் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு நிர்வாகக் குழுக் கூட்டம், சட்ட அமலாக்கக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்றது.
     கூட்டத்தில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 30 பேரும், சட்ட அமலாக்கக் கூட்டத்தில் 16 பேரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல் தொடர்பாக அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவுரைகளையும், நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்துவதை நீக்கி குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தை மாற்றவும் அறிவுரை வழங்கினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai