சுடச்சுட

  

  விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, குமாரபாளையத்தில் மறியலில் ஈடுபட்ட தொழில் சங்கத்தைச் சேர்ந்த 34 பெண்கள் உள்பட 98 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், வேலை பாதுகாப்புத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
   இப்போராட்டத்தில் பங்கேற்ற சிஐடியூ, ஏஐடியூசி உள்பட பல்வேறு தொழிற்சங்கத்தினர் குமாரபாளையத்தில் பேரணி நடத்தினர். தொடர்ந்து, கனரா வங்கியின் முன் அமர்ந்து சிஐடியூ மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.ஆறுமுகம், ஏஐடியூசி நகரச் செயலர் கே.எஸ்.பாலசுப்பிரமணி, ஏஐசிசிடியூ மாவட்டச் செயலர் எஸ்.சுப்பிரமணி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ்.ஈஸ்வரன், திமுக நகரப் பொறுப்பாளர் எஸ்.சேகர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
   இப்போராட்டத்தில் ஈடுபட்ட 34 பெண்கள் உள்பட 98 பேரைக் கைது செய்த போலீஸார் மாலையில் விடுவித்தனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai