சுடச்சுட

    

    5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம்

    By DIN  |   Published on : 04th September 2016 11:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகக் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வாயில் முழக்கப் போராட்டம் நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
     கல்லூரி கல்வி இயக்குநர் பதவியை நிரந்தரமாக பணி பதிவு மூப்பு அடிப்படையில் உடனே நிரப்ப வேண்டும். கடந்த 2006 ஜனவரி 1-ஆம் தேதிக்கு பின் பணியில் சேர்ந்த கல்லூரி ஆசிரியர்கள் அனைவருக்கும் யுஜிசி விதிமுறைகள்படி, பணி மேம்பாட்டுக்குத் தகுதியான நாள் முதல் முழுப் பணப்பயனுடன் கூடிய பணி மேம்பாடு வழங்க வேண்டும்.
     மருத்துவம், கல்வியியல், பொறியியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகள்போல், தமிழகத்தில் சுயநிதிப் பிரிவில் நடத்தப்படும் கலை, அறிவியல் பாடப் பிரிவுகளுக்கான கல்வி கட்டணத்தை வரையறை செய்ய வேண்டும்.
     அண்ணாமலை பல்கலைக்கழக உபரி ஆசிரியர்களை, மாநில அரசு பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், உதவி பெறும் கல்லூரிகளில் நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
     மண்டலச் செயலர் பழனிவேலு தலைமை வகித்தார். கிளைத் தலைவர் சுந்தரகோபால், செயலர் லோகநாதன், நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
     நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற வாயில் முழக்கப் போராட்டத்துக்கு, கல்லூரி ஆசிரியர் கழகத் தலைவர் பாரதி தலைமை வகித்தார். செயலாளர் புவனேஸ்வரி, பொருளாளர் சுஜாதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai