சுடச்சுட

    

    உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எல்ஐசி நிர்வாகம் அமல்படுத்த கோரிக்கை

    By DIN  |   Published on : 05th September 2016 03:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எல்ஐசி நிர்வாகம் விரைந்து அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு பணிநீக்கப்பட்ட முழுநேர, தாற்காலிக எல்ஐசி ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
     சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு விளக்கக் கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. மாநில பொருளாளர் சுப்ரமணி தலைமை வகித்தார். பொதுச்செயலர் ராஜேந்திரன், துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் கோரிக்கை குறித்து பேசினர்.
     நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கடந்த ஆண்டு மார்ச் 18ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும், சிறு திருத்தம் செய்து கடந்த மாதம் 9ஆம் தேதி வழங்கிய தீர்ப்பையும் எல்ஐசி நிர்வாகம் விரைந்து அமல்படுத்த வேண்டும்.
     25 ஆண்டு கால போராட்டம் என்பதாலும், அனைத்து மனுதாரர்களும் 50 வயதை கடந்தவர்கள் என்பதாலும் காலதாமதம் செய்யாமல் அமல்படுத்த வேண்டும். தற்போது எல்ஐசி, நிரந்தர பணியாளர்களைக் கொண்டுள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த தீர்ப்பை அமல்படுத்த உதவ வேண்டும்.
     சங்க நிர்வாகிகள், ரமேஷ், வீரமணி, மோகன்ராஜ், மகேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai