சுடச்சுட

    

    நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் பணிகள் குறித்து மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
     மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வரவேற்று ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார். எம்எல்ஏக்கள் கே.பி.பி.பாஸ்கர், சி.சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி, கே.எஸ்.மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் வி.சரோஜா பங்கேற்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பேரூராட்சிகள் துறை, நகராட்சி நிர்வாகம், தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சமூக நலத் துறை, சத்துணவுத் திட்டத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகள், நலத் திட்ட உதவிகளின் விவரங்கள் குறித்து துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், அனைத்து பணிகளையும், விரைவாகவும், துரிதமாகவும் முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர்.
     இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிச்சாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai