சுடச்சுட

  

  பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறில் எழுந்தருளியுள்ள சங்கிலி கருப்பண்ண சுவாமி கோவில் திருவிழா வெள்ளிக்கிழமை துவங்கி 3 நாட்கள் நடைபெற்றது.
   பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறில் எழுந்தருளியுள்ள சங்கிலி கருப்பண்ண சுவாமி, ஆச்சியம்மன் மற்றும் ஆலமரத்து கருப்பண்ண சுவாமி ஆகிய தெய்வங்களுக்கு திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. சனிக்கிழமை காலை பக்தர்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீராடி கரகம் பாலித்து தீர்த்தக் குடங்களுடன் ஊர்வலமாகப் புறப்பட்டு, கோயிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து பச்சை பூஜை நடைபெற்றது.
   ஞாயிற்றுக்கிழமை காலை சங்கிலி கருப்பண்ண சுவாமிக்கு கிடா வெட்டும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த குடிபாட்டு மக்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நன்செய் இடையாறு சங்கிலி கருப்பண்ண சாமி கோவில் விழா திருப்பணிக் குழுவினர், குடிப்பாட்டு மக்கள் மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai