சுடச்சுட

    

    நாமக்கல்லில் நடந்த மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
     தமிழ்நாடு கியோ குஷின் காய்கான் கராத்தே அசோசியேஷன் சார்பில் நாமக்கல் செல்வம் மெட்ரிக் பள்ளியில் கராத்தே தேர்வு மற்றும் ஜூடோ தற்காப்புக் கலை விழிப்புணர்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     உதயா மார்ஷியல் ஆர்ட்ஸ் தலைமை பயிற்சியாளர் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இப் போட்டியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். சுய மனிதப் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கான தற்காப்புகள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது.
     போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு தகுதி அடிப்படையில் ஆரஞ்ச் முதல் காவி வரையிலான பெல்ட்டுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பள்ளி முதல்வர் சாரதாமணி பரிசுகளை வழங்கினார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai