சுடச்சுட

    

    குமாரபாளையம் அருகே தீ விபத்தில் சாயப்பட்டறைக் கொட்டகை சேதம்

    By குமாரபாளையம்,  |   Published on : 06th September 2016 08:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமாரபாளையம் அருகே தீ விபத்தில் சாயப்பட்டறையின் கூரைக் கொட்டகை திங்கள்கிழமை எரிந்து சேதமடைந்தது .
     குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் ஆறுமுகக் கவுண்டர் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (50). இவருக்குச் சொந்தமான சாயப்பட்டறை இப்பகுதியில் இயங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சாயப்பட்டறையில் நூல்களை உலர வைக்க தென்னங்கீற்றுக் கொட்டகை அமைத்திருந்தார்.
     இந்தக் கொட்டகைக்கு அருகாமையில் குப்பைகளுக்கு திங்கள்கிழமை பிற்பகலில் தீ வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து பறந்த தீப்பிழம்புகளால் கூரையின் மேற்பகுதியில் தீப்பிடித்தது. காற்று வீசியதில் தீ மளமளவெனப் பரவி கொட்டகையில் பரவலாகப் பிடித்து எரியத் தொடங்கியது. இதைக் கண்டதும் அப்பகுதியினர் விரைந்து சென்று கொட்டகைக்குள்ளிருந்த நூல்களை மீட்டனர்.
     இதுகுறித்து தகவலறிந்த பவானி தீயணைப்பு நிலைய அலுவலர் பொன்னாமலை தலைமையில் விரைந்த தீயணைப்பு படையினர் கொட்டகையில் பிடித்த தீயை தண்ணீரைப் பீய்ச்சியடித்து அணைத்தனர். சேத மதிப்பு ரூ.1.50 லட்சம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai