Enable Javscript for better performance
பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா- Dinamani

சுடச்சுட

    

    பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா

    By பரமத்தி வேலூர்,  |   Published on : 06th September 2016 08:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலூர் பேட்டையில் உள்ள பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி ஆலயத்தில் விநாயகர் சதுரத்தி விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
     பரமத்தி வேலூரில் உள்ள பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த வியாழக்கிழமை காலை தொடங்கியது. விழாவையொட்டி பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதிக்கு சிறப்பு யாகம், அபிஷேகம், அலங்காரம் மற்றும் லட்சார்ச்சனை நடைபெற்றது. மாலை 108 விக்னேஷ்வர பூஜையும், வெள்ளிக்கிழமை காலை யாக வேள்வியும், அபிஷேக ஆராதணைகளும், லட்சார்ச்சனையும் நடைபெற்றது.
     சனிக்கிழமை காலை 108 வலம்புரி மற்றும் சங்காபிஷேகம் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை பால்குட அபிஷேகம், திருமஞ்சன அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெற்றன.
     திங்கள்கிழமை காலை விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 11 அடி உயரமுள்ள பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதிக்கு கணபதி யாகம், சிறப்பு அலங்காரம், தன பூஜை, சுமங்கலி பூஜை, தீப பூஜை, மகா ஆராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
     திருச்சி, நாமக்கல், கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். காலை 9 மணி முதல் இலவச பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ முகாம் கோயிலில் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி ஆலய விநாயகர் சதுர்த்தி விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
     கரூர்-தேசிய நெடுஞ்சாலையில் காவிரி கரையோரப் பகுதியில் உள்ள சத்திரத்து விநாயகர் ஆலயத்தில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai