சுடச்சுட

    

    மழைத்தூவான், தெளிப்பு நீர்ப் பாசன அமைப்புகளை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு

    By நாமக்கல்,  |   Published on : 06th September 2016 08:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அவசர நீர்ப்பாசனப் பயன்பாட்டிற்கு மழைத்தூவான் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசன அமைப்புகள் டீசல் இன்ஜினுடன் இலவசமாக வழங்கப்படுகிறது
     இதுகுறித்து நாமக்கல் மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலர்கள் கூறியது, வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் உழுவை வாடகைத் திட்டத்தில் புல்டோசர், டிராக்டர், நெல் அறுவடை இயந்திரம் ஆகியவற்றை விவசாயிகள் வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
     புல்டோசர் மணிக்கு ரூ.840-க்கும், டிராக்டர் மணிக்கு ரூ.340-க்கும், வீல் டைப் நெல் அறுவடை இயந்திரம் மணிக்கு ரூ.875-க்கும், டிராக் டைப் நெல் அறுவடை இயந்திரம் மணிக்கு ரூ.1,415-க்கும் வாடகைக்கு விடப்படுகிறது.
     சிறுபாசனத் திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு அல்லது ஒரு வெடிக்கு ரூ.250 வீதம் பாறை வெடிக்கும் கருவியை விவசாயிகள் கிணறு வெட்டப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
     தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் வாடகையில்லாமல் அவசர நீர்ப்பாசனப் பயன்பாட்டிற்கு மழைத்தூவான் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசன அமைப்புகள் டீசல் இன்ஜினுடன் வழங்கப்படுகிறது. உரிய விண்ணப்பம் அளித்து இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
     வேளாண்மை இயந்திர மயமாக்குதலின் துணை இயக்கம் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு நிதியிலிருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு டிராக்டர், ரோட்டாவேட்டர், பவர் டில்லர் போன்ற இயந்திரங்கள் மற்றும் கருவிகள் 33 பேருக்கு மானிய விலையில் வழங்க ரூ.29.59 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
     தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரோட்டா வேட்டர், தீவனப் புல்வெட்டும் கருவி (சாப் கட்டர்), பவர்வீடர் போன்ற கருவிகள் 9 பேருக்கு மானியம் வழங்க ரூ.2.63 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
     வேளாண்மை இயந்திரங்கள் வாடகை மையம் திட்டத்தின் கீழ் வட்டாரத்திற்கு ஒரு வேளாண் இயந்திரங்கள் கொண்ட வாடகை மையம் ஏற்படுத்த அரசு உத்திரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்நிதியாண்டில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சமும், வேளாண்மை இயந்திரமயமாக்குதலின் துணை இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சமும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
     இத்திட்டத்தில் ஒருமையத்திற்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கினால் ரூ.10 லட்சம் மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தினை விவசாய குழுக்கள், நிறுவனங்கள், தொழில் முனைவோர் மற்றும் விவசாயிகள் பயன்படுத்தி வேளாண் கருவிகளை அரசு மானியத்துடன் விலைக்குப் பெற்று வாடகைக்கு விட்டுப் பயன்பெறலாம்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai