சுடச்சுட

    

    அத்தனூர் பேரூராட்சி அலுவலகத்தில் உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

    By ராசிபுரம்,  |   Published on : 07th September 2016 10:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராசிபுரம் அருகேயுள்ள அத்தனூர் பேரூராட்சியில் தலைவர் தன்னிச்சையாக செயல்படுவதாகக் கூறி, உறுப்பினர்கள் 13 பேர் செவ்வாய்க்கிழமை கூட்ட அரங்கில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.
    அத்தனூர் பேரூராட்சியின் தலைவராக அதிமுகவை சேர்ந்த ஏ.எஸ்.ராமதாஸ் உள்ளார். இப்பேரூராட்சியில் 9 அதிமுக உறுப்பினர்கள், 3 திமுக உறுப்பினர்கள் உள்ளிட்ட 14 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில், பேரூராட்சி மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை தலைவர் தலைமையில் தொடங்கியது. இக்கூட்டத்தில், பேரூராட்சியின் பல்வேறு பணிகளுக்கான வரவு செலவு அறிக்கை, திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து டெண்டர் விடுவது போன்றவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. 
    இக்கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் அதிமுகவை சேர்ந்த துணைத் தலைவர் அழகேசன் திடக்கழிவு மேலாண்மை திட்டம் டெண்டர் விவகாரத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது என பிரச்னை எழுப்பினார். கட்டட அனுமதி வழங்குவது, புதிய கட்டடங்களுக்கான வரி விதிப்பு போன்றவற்றில் தலைவர் பேரூராட்சி அலுவலர்கள் சிலரது ஒத்துழைப்புடன் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளார் என புகார் கூறினார். 
    இதை முன்வைத்து துணைத் தலைவர் தலைமையில் 13 உறுப்பினர்கள் பிரச்னை எழுப்பியதால், தலைவர் கூட்டத்தை விட்டு வெளியேறினார். ஆனால் பிற உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைவரின் தன்னிச்சை போக்குக்கு கண்டனம் தெரிவித்து, கூட்ட அரங்கிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களுக்குள் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. 
    பேரூராட்சி செயல் அலுவலர் மல்லிகை சுந்தரம் உள்ளிட்டோர் சமரசம் ஏற்படுத்தியும் அதனை உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் இவர்களது போராட்டம் மாலை வரை தொடர்ந்தது. 
    மேற்கொண்டு பிரச்சனை ஏற்படாமல் இருக்க அங்கு போலீஸாரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai