சுடச்சுட

    

    குடிநீர் விநியோகம் நிறுத்தம்: பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

    By நாமக்கல்,  |   Published on : 07th September 2016 10:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தொடர்ந்து 18 நாள்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து, பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
    திருச்செங்கோடு வட்டம், மல்லசமுத்திரம் பேரூராட்சிக்கு உள்பட்ட 2,3ஆவது வார்டு பகுதிகளில் கடந்த 18 நாள்களாக குடிநீர் விநியோகிக்காததைக் கண்டித்து, 50 பெண்கள் உள்பட சுமார் 100 பேர் பேரூராட்சி அலுவலகத்தை காலிகுடங்களுடன் செவ்வாய்க்கிழமை காலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
    இந்தப் போராட்டம் சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது. காவல் துறையினர் மற்றும் பேரூராட்சித் தலைவர் திருமலை, மல்லசமுத்திரம் காவல் உதவி ஆய்வாளர் மோகனா ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 
    அப்போது பேரூராட்சி நிர்வாகம் தரப்பில் குழாய்கள் பழுதானதால் தொடர்ந்து குடிநீர் வழங்க இயலவில்லை. பழுது நீக்கம் செய்து விட்டதால் புதன்கிழமை முதல் குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்தைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai