Enable Javscript for better performance
நாமகிரிப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர்  ஆயுதப் படைக்கு மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    நாமகிரிப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர்  ஆயுதப் படைக்கு மாற்றம் 

    By நாமக்கல்,  |   Published on : 07th September 2016 10:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமகிரிப்பேட்டை காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த அனந்தராமன் நாமக்கல் ஆயுதப் படைக்கு செவ்வாய்க்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் பிறப்பித்தார். 
    கடந்த சில நாள்களுக்கு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்த தாண்டாகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ராமசந்திரன் என்பவரை காவல் உதவி ஆய்வாளர் அனந்தராமன் தாக்கியதாகப் புகார் எழுந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் அவர் ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai