சுடச்சுட

  

  நாமக்கல்லில் போலி வங்கிக் கிளை: ரூ.50 லட்சம் மோசடி

  By நாமக்கல்,  |   Published on : 07th September 2016 10:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல்லில் "எஸ் ஏபிஎஸ்' என்ற பெயரில் போலி வங்கி நடத்தி ரூ.50 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தொகையை மீட்டுத் தர வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர். 
  நாமக்கல்லில் சேலம் சாலையில் "எஸ் ஏபிஎஸ்' என்ற பெயரில் வங்கி ஒன்று கடந்த 6 மாதங்களாகச் செயல்பட்டு வருகிறது. இதே பெயரில் தருமபுரியில் செயல்பட்டுவந்த வங்கி போலியானது என்றும், "எஸ் பேங்க்' என்ற பெயரைத் தவறாகப் பயன்படுத்தி வங்கியை நடத்தி வந்ததாக 4 பேரை தருமபுரி போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். 
  இந்த நிலையில், நாமக்கல் கிளை அலுவலகத்தில் பணிபுரிந்த மற்றும் வங்கியில் சேமிப்புக் கணக்கில் பணம் செலுத்திய 30-க்கும் மேற்பட்டோர் நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரனை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.   அதில், சோமசுந்தரம் உள்ளிட்டோர், தங்களுக்கு வங்கியில் பணி வழங்குவதாகக் கூறி ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வைப்புத் தொகை பெற்றுள்ளதோடு, பொதுமக்களிடம் சுமார் ரூ.50 லட்சம் வரை சேமிப்புத் தொகையைப் பெற்றுள்ளனர். 
   தற்போது வங்கி போலியானது என்று தெரியவந்துள்ளதால், வேலைக்காக அளித்த வைப்புத்தொகை மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெற்ற சேமிப்புத் தொகை மீது விசாரணை மேற்கொண்டு, தங்களுடையப் பணத்தைத் திரும்பப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai