Enable Javscript for better performance
பரமத்தி நகருக்குள் வந்து செல்லாத 8 பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை- Dinamani

சுடச்சுட

    

    பரமத்தி நகருக்குள் வந்து செல்லாத 8 பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை

    By பரமத்திவேலூர்,  |   Published on : 07th September 2016 10:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி நகருக்குள் வந்து செல்லாத 2 தனியார் மற்றும் 6 அரசுப் பேருந்துகளுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர் தணிக்கை அறிக்கை வழங்கி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    பரமத்திவேலூர், கரூர், திண்டுக்கல், மதுரை, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பரமத்தி நகர் பகுதிக்குள் வந்து செல்ல வேண்டிய பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்வதாகவும், இதனால் இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் புகார் மனு அனுப்பியிருந்தனர்.
    அதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் பிறப்பித்த உத்தரவின் பேரில், நாமக்கல் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தாமோதரன், செந்தில்குமார் மற்றும் பரமத்திவேலூர் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை பரமத்தி தேசிய நெடுஞ்சாலையில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், பரமத்தி நகர் பகுதிக்குள் வந்து செல்லாத இரண்டு தனியார் பேருந்துகள் மற்றும் 6 அரசுப் பேருந்துகளுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 
    மேலும், பரமத்தி நகருக்குள் வந்து செல்ல உரிமம் இருந்தும் பரமத்தி நகருக்குள் வந்து செல்லாத பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai