சுடச்சுட

    

    புதிய தொழில்முனைவோருக்கு ரூ.1.46 கோடி முதலீட்டு மானியம்: ஆட்சியர் வழங்கினார்

    By நாமக்கல்,  |   Published on : 07th September 2016 10:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் (நீட்ஸ்) கீழ் 26 பேருக்கு ரூ.1.46 கோடி முதலீட்டு மானியம் வழங்கப்பட்டது. 
    நீட்ஸ் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத் தொழில் மையத்தின் சார்பில், புதிய கடனுதவி பெற்று தொழில் தொடங்கியப் பயனாளிகளுக்கு முதலீட்டு மானியத்தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
    இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் புதிய தொழில் முனைவோருக்கு முதலீட்டு மானியத்தொகையை வழங்கிப் பேசியது: 
    முதல் தலைமுறை தொழில் முனைவோர்களை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் பட்டம், பட்டயம் மற்றும் தொழிற் பழகுநர் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு, தொழில் முனைவோர் பயிற்சி அளித்து வங்கிகளின் மூலமாக மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
    நீட்ஸ் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பயனாளிகளில் தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. 
    அவ்வாறு பயிற்சி பெற்ற பயனாளிகள் ஆயத்த ஆடைகள் தயாரித்தல், விசைத்தறி, பி.வி.சி பைப், சிமென்ட் கான்கீரிட் பிளாக், பயோ பிரிகேட்ஸ், காட்டன் ராக் பல்பு போர்டு போன்ற உற்பத்தி தொழில்களுக்கும் மற்றும் ஆழ்துளைக் கிணறு தோண்டுதல், எடை மேடை, சலவைத் தொழில், ஆய்வகம் போன்ற சேவைத் தொழில்களையும் தொடங்கி வங்கிகளின் மூலம் கடனுதவி பெற்று தொழில்களை நடத்தி வருகின்றனர் என்றார். 
    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு வங்கிகள் மூலம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.12.96 கோடி கடனுதவி பெற்று தொழில் புரிந்து வருகின்ற 26 பயனாளிகளுக்கு ரூ.1.46 கோடி முதலீட்டு மானியத்துக்கான காசோலையை ஆட்சியர் வழங்கினார்.  
    இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தொழில் மைய பொதுமேலாளர் க.ராஜு, அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர். 

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai