சுடச்சுட

    

    பொதுமக்களை அச்சுறுத்தி வந்த விஷப் பூச்சிகள் விரட்டியடிப்பு

    By பரமத்தி வேலூர்,  |   Published on : 07th September 2016 10:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்திவேலூர் வட்டம், பாலப்பட்டி அருகே சவுக்கு மரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த விஷப் பூச்சிகளை தீயணைப்புத் துறையினர் விரட்டியடித்தனர்.
    பாலப்பட்டி அருகே உள்ள சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் கோபால் (45). இவரது சவுக்கு தோட்டத்தில் இருந்த ஒரு சவுக்கு மரத்தில் ஆயிரக்கணக்கான விஷப் பூச்சிகள் கூடு கட்டியிருந்தன. 
    இந்த விஷப் பூச்சிகள் அவ்வழியாக சென்ற பொதுமக்களை துன்புறுத்தி வந்தன. இதுகுறித்து கோபால் வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறையினரிடம் புகார் செய்திருந்தார். இதையடுத்து, தீயணைப்புத் துறையினர் திங்கள்கிழமை இரவு சவுக்கு மரத்தில் இருந்த விஷப் பூச்சிகளை தண்ணீரைப் பீய்ச்சியடித்து அங்கிருந்து விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai