சுடச்சுட

    

    மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வுப் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு 

    By குமாரபாளையம்,  |   Published on : 07th September 2016 10:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமாரபாளையத்தில் உள்ள ஸ்ரீகம்பத்துக்காரர் மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பயிற்சி மற்றும் மறுவாழ்வுப் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. 
    இதில், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் விநாயகர், முருகன், சிவன், பார்வதி போன்ற தெய்வ உருவங்களில் வேடமணிந்து வந்தனர். முன்னதாக, விநாயகருக்கு எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை மற்றும் அரளிப் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.  
    பள்ளிச் செயலர் மா.உமா மகேஸ்வரி முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எஸ்.விஜயகுமார், பயிற்சியாளர் லாவண்யா மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. 

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai