சுடச்சுட

  

  ராசிபுரம் பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. 
  ராசிபுரம் எஸ்.ஆர்.வி எக்ùஸல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.
  இந்த விழாவில் 12-ம் வகுப்பு மாணவர் சூர்யா, 11-ம் வகுப்பு மாணவி பிரதீபா ஆகியோர் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதின் முக்கியத்தும் குறித்துப் பேசினர். 
  விழாவில் பள்ளி ஆசிரியர்கள் பொன்னாடை போர்த்தி கெüரவிக்கப்பட்டனர். பள்ளித் தலைவர் ஆர்.துரைசாமி, செயலர் மற்றும் தாளாளர் கே.என்.சுப்பிரமணியன், நிர்வாக அறங்காவலர் ஆர்.மனோகரன், பொருளர் பி.வஜ்ரவேலு, இயக்குநர் இ. தங்கவேல் ஆகியோர் விழாவில் ஆசிரியர்களை வாழ்த்திப் பேசினர். விழாவின் முடிவில் ஆசிரியர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி முதல்வர் பி.ஏ.சிவராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
  வெற்றி விகாஸ் பள்ளி: மல்லூர் வெற்றி விகாஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில், ஆசிரியர்களின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி, விளையாட்டுப் போட்டி போன்றவை நடத்தப்பட்டன.
  குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் புகைப்படத்துக்கு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள் என பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 
  இதில் பள்ளி நிறுவனர் எஸ்.குணசேகரன் பங்கேற்று, ஆசிரியர்களின் சிறப்பு குறித்துப் பேசினார். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நிர்வாக அலுவலர் கே.சந்திரசேகர், பெண்கள் பள்ளி நிர்வாக அலுவலர் மாரிமுத்து ஆகியோர் ஆசிரியர் தொழிலின் உன்னதம் குறித்துப் பேசினர். விழாவில் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜி.வெற்றிச்செல்வன், செயலர் பாலசுப்ரமணியன், இணைச்செயலர் ஆர்.யு.சிற்றரசு, பொருளாளர் பழனிவேல், தாளாளர் ஜி.விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai