சுடச்சுட

    

    காவிரியாற்றில் 160 விநாயகர் சிலைகள் கரைப்பு

    By பரமத்தி வேலூர்,  |   Published on : 08th September 2016 08:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலூர் மற்றும் ஜேடர்பாளையம் காவிரியாற்றில் 160-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்தவர்கள் கரைத்தனர்.
     நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கடந்த 5-ஆம் தேதி விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதற்காக பக்தர்கள் மற்றும் இந்து முன்னணியினர் பல்வேறு இடங்களில் காகிதக் கூல், களிமண் உள்ளிட்டவைகளால் ஆன விநாயகர் சிலைகளை அமைத்து வழிபட்டு வந்தனர். இந்த விநாயகர் சிலைகளை பரமத்தி வேலூர் மற்றும் ஜேடர்பாளையம் காவிரியாற்றில் புதன்கிழமை கரைத்தனர்.
     சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி, மல்லசமுத்திரம், நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி, ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்தி மற்றும் வேலூர் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் போலீஸார் பாதுகாப்புடன் ஜேடர்பாளையம் ராஜா வாய்க்கால் மற்றும் வேலூர் காவிரியாற்றில் கரைக்கப்பட்டன.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai