சுடச்சுட

    

    கோ-ஆப்டெக்ஸில் ஆசிரியர் தின சிறப்பு விற்பனை தொடக்கம்

    By நாமக்கல்,  |   Published on : 08th September 2016 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் கோ-ஆப்டெக்ஸில் ஆசிரியர் தின சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. வரும் 14-ஆம் தேதி வரை இந்த சிறப்பு விற்பனை நடைபெறும்.
     கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் சுபமுகூர்த்தம், விசேஷ காலம், சிறப்பு தினங்கள், புதிய ரகங்கள் அறிமுகம் ஆகியவற்றை மையப்படுத்தி, பல்வேறு விற்பனை யுக்திகளை கையாண்டு வருகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
     கோ-ஆப்டெக்ஸ் விற்பனையில் பெரிதும் உறுதுணையாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்பதால், அவர்களை கெüரவிக்கும் வகையில், கடந்த 5-ஆம் தேதி தொடங்கி 14-ஆம் தேதி வரை ஆசிரியர் தின சிறப்பு விற்பனை கோ-ஆப்டெக்ஸில் நடைபெற்று வருகிறது.
     அதன்படி, நாமக்கல் கோ-ஆப்டெக்ஸில் சிறப்பு விற்பனை தொடக்க விழாவை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.கோபிதாஸ் புதன்கிழமை தொடக்கி வைத்தார். இங்கு விற்பனை செய்யப்படும் பருத்தி ரகங்களுக்கு 30 சதவீதமும், விசைத்தறி ரகங்களுக்கு 20 சதவீதமும் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
     நிகழ்ச்சியில் மண்டல மேலாளர் சு.சண்முகம், மேலாளர் பி.செல்வாம்பாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai