சுடச்சுட

    

    பரமத்தி வேலூர் சந்தையில் வெற்றிலை விலை உயர்வு

    By பரமத்தி வேலூர்,  |   Published on : 08th September 2016 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலூர் வெற்றிலை ஏலச் சந்தையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற ஏலத்தில் வெற்றிலைகளின் விலை உயர்வடைந்துள்ளதால், வெற்றிலைப் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
     பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளான பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் வெற்றிலைப் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வெற்றிலைகள் கர்நாடகம், கேரளம், குஜராத், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
     கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில், வெள்ளைக்கொடி வெற்றிலை (இளம்பயிர் மார்) 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.5 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை (இளம்பயிர் மார்) சுமை ஒன்று ரூ.2 ஆயிரத்துக்கும் ஏலம் போயின. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை (இளம்பயிர் மார்) 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.7 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை (இளம்பயிர் மார்) சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்துக்கும் ஏலம் போயின. முதியம் பயிர் வெற்றிலையின் பருவம் இல்லாததாலும், வெற்றிலையின் வரத்து குறைந்திருந்ததாலும் வெற்றிலையின் விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
     
     
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai