சுடச்சுட

    

    மயில் முட்டைகள் அழிப்பு புகார்: கண்காணிக்க குழு அமைப்பு

    By நாமக்கல்,  |   Published on : 08th September 2016 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மயில் முட்டைகள் அழிக்கப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து, அதுகுறித்து கண்காணித்து நடவடிக்கையெடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என நாமக்கல் வனச்சரக அலுவலர் கனகரத்தினம் தெரிவித்தார்.
     நாமக்கல் மாவட்டத்தில் சில பகுதிகளில் மயில்களின் முட்டைகளை சிலர் அழித்து வருவதாக வனத்துறைக்கு புகார் வந்தது. மயில்களால் பயிர்கள் பாதிப்படைவதைத் தடுக்க, அதன் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விவசாயிகள் சிலர் இத்தகையை செயல்களில் ஈடுபடுவதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் வனத்துறையில் புகார் அளித்தனர். இதனையடுத்து, இத்தகைய செயல்களைத் தடுக்க வனத்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
     இதுகுறித்து மாவட்ட வனச்சரகர் கனகரத்தினம் கூறியது: மாவட்டத்தில் ஒரு சில இடங்களில், மயில் முட்டைகளை அழித்து வருவதாக தகவல் வந்துள்ளது. இது மிகப்பெரிய குற்றம். இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களைக் கண்டுபிடிப்பதற்காக 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேசிய பறவையான மயில்களின் முட்டைகளை அழிப்பவர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது தேசிய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai