சுடச்சுட

    

    பரமத்தி வேலூர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் சரகத்துக்குள்பட்ட வேலகவுண்டம்பட்டி அருகே புதன்கிழமை சைக்கிளில் சென்றவர் மீது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி மோதியதில் விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
     வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள பள்ளிக்காடு, அப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன் (62). இவர் புதன்கிழமை காலை தனது சைக்கிளில் பால் எடுத்துக்கொண்டு மாணிக்கம்பாளையம் நோக்கி சென்றார். அப்போது, நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோடு நோக்கி சென்ற டிப்பர் லாரி பழனியப்பன் மீது மோதியது. இதில் பழனியப்பன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
     இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சங்ககிரியைச் சேர்ந்த டிப்பர் லாரி ஓட்டுநர் மதன்குமாரை (27) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai