சுடச்சுட

  

  வாக்காளர் பட்டியல் திருத்த விழிப்புணர்வு பேரணி

  By நாமக்கல்,  |   Published on : 08th September 2016 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாக்காளர் பட்டியல் சுருக்கமுறைத் திருத்தம் குறித்த விழிப்புணர்வு பேரணி நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்றது.
   பேரணியை மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையேற்று தொடக்கி வைத்தார். நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி மோகனூர் சாலை, அண்ணாசிலை, மணிக்கூண்டு, திருச்சி சாலை வழியாக மீண்டும் நாமக்கல் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது.
   இதில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, வாக்காளர் பட்டியல் சுருக்கமுறைத் திருத்தம் குறித்த விழிப்புணர்வு பதாதைகளை ஏந்திச் சென்றனர். மேலும் பொதுமக்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.
   2017 ஜனவரி மாதம் 1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் தற்போது நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மற்றும் முகவரி மாற்றம் செய்ய வரும் 30-ஆம் தேதி வரை பொதுமக்கள் படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் அளிக்கலாம்.
   ஜ்ஜ்ஜ்.ங்ப்ங்ஸ்ரீற்ண்ர்ய்ள்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாகவும் பதிவு செய்யலாம். மேலும் இதற்கென வரும் 11 மற்றும் 25-ஆம் தேதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
   எனவே, 1.1.2017 அன்று 18 வயது பூர்த்தியாகும் (1.1.1999-க்கு முன்னர் பிறந்தவர்கள்) அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.
   இதில், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் ம.ராஜசேகரன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் க.சந்திரசேகர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.கோபிதாஸ், நாமக்கல் வருவாய் வட்டாட்சியர் சுகுமார், நாமக்கல் நகராட்சி ஆணையர் எம்.செந்தில்முருகன், தேர்தல் தனி வட்டாட்சியர் சுப்பிரமணி, மாவட்டக் கல்வி அலுவலர் அருள் அரங்கன், செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai