சுடச்சுட

    

    ராசிபுரம் பகுதியில் விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்கச் சென்ற போது விபத்து ஏற்பட்டு ஆட்டோ கவிழ்ந்ததில் 12 பேர் காயமடைந்தனர்.
     ராசிபுரம் வி.நகர் பகுதியிலிருந்து மோகனூர் காவிரி ஆற்றில் விநாயகர் சிலையைக் கரைக்க 14 பேர் 4 சக்கர ஆட்டோவில் சென்றனர். இவர்கள் சென்ற ஆட்டோ சிங்களாந்தபுரம் பகுதியில் சென்றபோது காந்தி நகர் வளைவுப் பகுதியில் நிலைதடுமாறி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ராசிபுரம் வி.நகர், கோனேரிப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த செந்தில் (34), நடராஜன் (39), வெங்கடேஷ் (28), யுவராஜ் (25), நந்தகுமார் (35), பிரபாகரன் (28), கோவிந்தராஜ் (29), சீனிவாசன் (49), விஜயகுமார் (28), சிவகுமார் (30), ரவிபிரசாத் (23), ராமகிருஷ்ணன் (35), தமிழரசன் (13), சக்திவேல் (29) உள்ளிட்ட 12 பேர் படுகாயமடைந்தனர்.
     காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு ராசிபுரம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த சிவக்குமார், தமிழரசன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து பேளுக்குறிச்சி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai