சுடச்சுட

  

  விநாயகர் சிலை விசர்ஜனம்: இன்று தொடங்க காவல் துறை அறிவுறுத்தல்

  By நாமக்கல்,  |   Published on : 08th September 2016 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விநாயகர் சிலை விசர்ஜன நிகழ்வை வியாழக்கிழமை தொடங்க காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
   இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் வெளியிட்ட செய்தி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை காவிரி ஆற்றுப் பகுதிகளான மோகனூர், இறையமங்கலம், வேலூர் காவிரி பாலம், குமாரபாளையம் காவிரி பாலம் அருகில் கரைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
   அதன்படி, வியாழக்கிழமை நாமக்கல் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகளை மோகனூர் காவிரி ஆற்றில் மாலை 5 மணிக்குள் கரைத்து விட வேண்டும்.
   9-ஆம் தேதி வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகளை மோகனூர் காவிரி ஆற்றில் மாலை 5 மணிக்குள் கரைத்து விட வேண்டும்.
   11-ஆம் தேதி பள்ளிப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகளை காவிரியின் மறுகரையில் உள்ள கருங்கல்பாளையம் ஆற்றங்கரையில் கரைத்து விட வேண்டும்.
   அதேபோல், கொல்லிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகளை அரப்பளீஸ்வரர் கோயில் ஆற்றில் கரைத்து விட வேண்டும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai