சுடச்சுட

    

    உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் புகார் தெரிவிக்கலாம்

    By DIN  |   Published on : 11th September 2016 04:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருத்தப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால் விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    விவசாய பயிர் சாகுபடி காலம் தொடங்கியுள்ள நிலையில், விவசாயப் பணிகளுக்கு விநியோகிக்கப்படும் டி.ஏ.பி, பொட்டாஷ், கலப்பு உரங்களின் விலையைக் குறைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விலை குறைப்பு கடந்த மாதம் 3-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
    எனவே, தனியார் உர விற்பனை நிலையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள விலையில் மட்டுமே உரங்களை விற்பனை செய்திட வேண்டும்.
    தற்போது உரங்களின் விலையை அரசு குறைத்துள்ளதையடுத்து இப்கோ, கிரிப்கோ, ஐ.பி.எல், ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ், பாக்ட், ஸ்பிக் மற்றும் மங்களுர் கெமிக்கல்ஸ் போன்ற அனைத்து நிறுவனங்களின் உரங்கள் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.
    இதன்படி ரூ. 1,185-க்கு விற்பனை செய்யப்பட்ட 50 கிலோ எடை கொண்ட இப்கோ நிறுவனத்தின் டி.ஏ.பி தற்பொழுது ரூ. 1,100 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதே போல் கிரிப்கோ டி.ஏ.பி தற்பொழுது ரூ. 1,210-க்கு விற்கப்பட்டது. தற்பொழுது ரூ. 1,135 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
    இதேபோல் ஐ.பி.எல் பொட்டாஷ் உரம் ரூ. 750 லிருந்து ரூ. 550 ஆக குறைக்கப்பட்டுள்ளது. எம்.சி.எப் நிறுவன பொட்டாஷ் உரம் ரூ. 800 லிருந்து ரூ. 550 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இதேபோல் காம்ப்ளக்ஸ் உரங்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால். இந்த விலைக்கு மேல் அதிகமாக உரங்களை விற்றால் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம் என்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai