சுடச்சுட

  

  எக்ஸல் கல்வி நிறுவனங்களில் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டம்

  By DIN  |   Published on : 11th September 2016 04:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனங்களில் பயிலும் கேரள மாணவ, மாணவிகள் சார்பில் கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
  விழாவை முன்னிட்டு எக்ஸல் பொறியியல் கல்லூரி, எக்ஸல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, எக்ஸல் பிசினஸ் ஸ்கூல், எக்ஸல் ஆர்க்கிடெக்சர் கல்லூரிகளில் மாணவிகள் பலவிதமான அத்தப்பூ கோலம் வரைந்திருந்தனர்.
  மேலும் கோலங்களில் ஓணம் பண்டிகையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் வாமன அவதார விளக்கம், ஓணம் பண்டிகையின் சிறப்பு, கேரளத்தில் அதிகமாக உள்ள தென்னை மரம், வயல்வெளி, நீர்வளம் ஆகியவற்றை பறைசாற்றும் படங்களும் வண்ணமயமாக வரையப்பட்டிருந்தன.
  தொடர்ந்து நடைபெற்ற விழாவில் எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஏ.கே. நடேசன், துணைத் தலைவர் என்.மதன் கார்த்திக் ஆகியோர் பங்கேற்று அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஓணம் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
  மேலும் கேரள மாணவர்கள் சார்பில் வாமன ராஜா வேடமிட்ட மாணவர் முன்னிலையில் கேரள செண்டை மேளம் இசைத்து, கல்லூரி பிரதான வாயிலிலிருந்து எக்ஸல் கல்வி நிறுவனங்கள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.
  அப்போது மாணவர்கள் தனி குழுக்களாக கேரள பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடத்தினர். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கேரள கதகளி நடனம், திருவாதிரை நடனம், குழு பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai