சுடச்சுட

  

  கரும்பில் இடைக்கணுப் புழுக்களைக் கட்டுப்படுத்தும் பயிற்சி

  By DIN  |   Published on : 11th September 2016 04:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கரும்பில் சொத்தையை ஏற்படுத்தும் இடைக்கணுப் புழுக்களைக் கட்டுப்படுத்துதல் குறித்த செயல்விளக்கப் பயிற்சி முகாம் குமாரபாளையத்தை அடுத்த குப்பாண்டபாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
  குமாரபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம், வேளாண்மைத் துறை, கிராம அளவிலான அம்மா பண்ணை மகளிர் குழுவினர் இணைந்து நடத்திய இம்முகாமை சங்கத் தலைவர் வி.தேவராஜன் தொடக்கி வைத்தார். ட்ரைகோ கிரம்மா எனும் ஒட்டுண்ணிக் குழவிகளை ஏக்கருக்கு 1 சிசி அளவிலான அட்டைகளை கரும்பு வயலில் 4 அல்லது 5 இடங்களில் கட்ட வேண்டும். அதிலிருந்து வரும் குழவிகள் தீமை செய்யும் இடைக்கணுப் புழுவின் முட்டைகள் மீது தன்னுடைய முட்டையை இட்டு அழிக்கும் வலிமை கொண்டவை.
  இதன்மூலம், கரும்பின் இடைக்கணுவில் சொத்தையை ஏற்படுத்தும் தீமை செய்யும் புழுக்களின் உற்பத்தி தடுக்கப்படும் என பள்ளிபாளையம் உதவி வேளாண்மை அலுவலர் எஸ்.மாயாஜோதி, வேளாண்மை உதவி இயக்குநர் பி.அசோக்குமார் ஆகியோர் விளக்கினர். கரும்புச் சோகைகளை தீ வைத்து கொளுத்துவதைத் தடுக்கவும், அதைத் தூளாக்கி மண்ணோடு உரமாக்கவும், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ஒரு ஹெக்டேருக்கு
  ரூ. 4,000 மானியம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர். அம்மா பண்ணை மகளிர் குழுத் தலைவி ஜெயலட்சுமி, விவசாயிகள் 20-க்கும் மேற்பட்டோர் இம்முகாமில் பங்கேற்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai