Enable Javscript for better performance
செப். 24, 25-இல் ராசிபுரத்தில்பல்துறை இலவச மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

  

  செப். 24, 25-இல் ராசிபுரத்தில்பல்துறை இலவச மருத்துவ முகாம்

  By DIN  |   Published on : 11th September 2016 04:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சென்னை ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை, மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் இலவச பல்துறை மருத்துவ முகாம் ராசிபுரத்தில் செப்டம்பர் 24, 25-ஆம் தேதிகளில் நடைபெறுகின்றன.
  இந்த மருத்துவக் கல்லூரியின் நிறுவனர் என்.பி.வி.ராமசாமி உடையார் நினைவாக ராசிபுரம் பூவாயம்மாள் திருமண மண்டபத்தில் இம்முகாம் நடைபெறுகிறது.
  மருத்துவப் பல்கலைக்கழக வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம் முகாமை தொடக்கி வைக்கிறார். தமிழகத்தின் முன்னணி மருத்துவர்கள் முகாமில் பங்கேற்று இலவச பரிசோதனை மேற்கொள்கின்றனர். சிறுநீரகம், நரம்பியல்,கண், எலும்பு, பல், காது, மூக்கு, தொண்டை போன்ற நோய்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றன. இதில் எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், இசிஜி, எக்கோ போன்றவையும், மருந்து மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

  இளம்பெண் மர்மச் சாவு: டி.எஸ்.பி. விசாரணை
   பாலப்பட்டி அருகே இளம்பெண் மர்மமான முறையில் வீட்டில் தூக்கிட்டு இறந்து கிடந்தது குறித்து பரமத்திவேலூர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார்.
  பாலப்பட்டி அருகே எல்லைமேடு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ். இவரது மகள் சந்தியா (23). இவர், ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயின்றுவிட்டு வங்கிப் பணிக்காகத் தேர்வுகளை எழுதி வந்தார்.இந்த நிலையில், சனிக்கிழமை மாலை வீட்டில் உள்ள மின் விசிறி பொருத்தும் கம்பியில் துப்பட்டாவால் தூக்கிட்டு இறந்து கிடந்தார். இவரது மர்மச் சாவு குறித்து பரமத்திவேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுஜாதா உள்பட போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இன்று வாக்காளர் பட்டியல்திருத்த சிறப்பு முகாம்
  நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை, வரும் 25-ஆம் தேதி ஆகிய இரு தினங்கள் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
  மாவட்டத்தில் உள்ள 1,569 வாக்குச் சாவடிகளிலும் நடைபெறும் இந்த முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய விரும்புவோர் வாக்குச் சாவடி முகாம்களை அணுகலாம்.
  மேலும் பொதுமக்கள் தங்களது பெயர்கள் பட்டியலில் இடம் பெறுவதை உறுதி செய்து கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
  அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை

  விவரப் பலகை வைக்கக் கோரிக்கை
  அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள் அடங்கிய விவரப் பலகை வைக்கத் துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து நாமக்கல் மாவட்டம், எம்.மேட்டுப்பட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வி.பழனிச்சாமி தெரிவித்ததாவது:
  பொதுமக்களிடம் அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறுவதைத் தடுத்திட சில ஆண்டுகளுக்கு முன்புவரை அனைத்து அரசு அலுவலகங்களின் வாயிலிலும் பொதுமக்களின் பார்வையில் தெரியும்படி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளின் பெயர், தொலைப்பேசி எண் அடங்கிய அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தன.
  இதனால், அரசு ஊழியர்கள் மத்தியில் அச்சம் இருந்தது. தற்போது பல அலுவலகங்களில் இந்தப் பலகைகள் எங்கு இருக்கிறது? எனத் தெரியவில்லை.
  ஊழல் முறைகேட்டைக் களையவும், வெளிப்படையான நிர்வாகம் நடைபெறவும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளின் தொலைபேசி, செல்லிடப்பேசி எண்கள் அடங்கிய விவரப் பலகையை பொதுமக்களுக்குத் தெரியும்படி வைக்கத் துறைசார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai