சுடச்சுட

  

  திருச்செங்கோடு அருகே தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே பெருமாள் மலை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் ரஞ்சிதா (45). கணவன், மகன் இறந்து விட்டனர். மகள் சுகன்யாவுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். அதனால் ரஞ்சிதா மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.
  இந்த நிலையில் சனிக்கிழமை காலை ரஞ்சிதா வீடு திறந்து இருந்துள்ளது. பால் ஊற்ற வந்தவர் ரஞ்சிதாவை கூப்பிட்டும் அவர் வரவில்லை. அதனால், அவர் உள்ளே சென்று பார்த்தபோது, ரஞ்சிதா கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரது உடைகளும் கலைந்த நிலையில் இருந்தன.
  தகவல் அறிந்த மொளசி காவல் துறையினர் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும், மோப்பநாய் பொய்கை வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய் சிறிது தொலைவு ஓடி மொளசி பேருந்து நிறுத்தம் அருகே நின்றது. தவிர, தடவியல் நிபுணர்கள் மூலம் தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்து மொளசி காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai