Enable Javscript for better performance
அதிமுக பிரமுகர் மீது நில அபகரிப்பு புகார்: எஸ்.பி.யிடம் மனு அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக பிரமுகர் மீது நில அபகரிப்பு புகார்: எஸ்.பி.யிடம் மனு அளிப்பு

    By நாமக்கல்,  |   Published on : 13th September 2016 08:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நிலத்தை அபகரித்துக் கொண்டதாக அதிமுக பிரமுகர் மீது 3 பேர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
     நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே மலைவேப்பங்குட்டையைச் சேர்ந்தவர் ஆர்.ஆர்.பி.சுரேஷ், இவர் ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலராகவும், உத்திரகிடிகாவல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவராகவும் இருக்கிறார். இவரின் மனைவி மல்லிகா உத்திரகிடிகாவல் ஊராட்சித் தலைவராக இருக்கிறார்.
     இந்த நிலையில், மலைவேப்பங்குட்டை பேங்காரர்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி, அவரது மகன் பார்த்தீபன் ஆகியோர் தங்களுக்குச் சொந்தமான 2.75 ஏக்கர் விவசாய நிலத்தை ஆர்.ஆர்.பி.சுரேஷ் அபகரித்துக் கொண்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரனிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
     அதில், ஜெயலட்சுமி, கண்பார்வையற்ற தன்னை ஏமாற்றி நிலப் பத்திரத்தில் கையெழுத்து பெற்றுவிட்டதாகவும், தன்னுடைய கணவர் ராமசாமிக்கு மது வாங்கிக் கொடுத்து கையெழுத்து பெற்று, ரூ.55 லட்சம் மதிப்புள்ள நில உரிமையை, சுரேஷ் தன்னுடைய பெயருக்கு உரிமை மாற்றம் செய்துள்ளார்.
     இந்த நிலத்தை அவரிடமிருந்து மீட்டுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
     அதுபோல், ராசிபுரம் வட்டம், கூத்தங்காடு கிராமத்தைச் சேர்ந்த சி.மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், நில மோசடி புகார் அளித்தார்.
     அதில், மலைவேப்பங்குட்டை கிராமத்தில் தனக்கும், மனைவி சாந்திக்கும் சொந்தமாக உள்ள 4.80 ஏக்கர் நிலத்தை, நாங்கள் கிரையம் வாங்கியதற்கு முன்பே, அந்த நிலத்தை வாங்கியதுபோல் போலி ஆவணம் தயாரித்து சுரேஷ் தன்னுடைய பெயருக்கு உரிமை மாற்றம் செய்துள்ளார்.
     மேலும் எங்கள் தோட்டத்துக்கு உள்ளே செல்ல விடாமல் தடுத்து வருகிறார். இவர், கடந்த 5 ஆண்டுகளில் ரூ.20 கோடி மதிப்புள்ள 50 ஏக்கர் நிலத்தை மோசடியாக தன்னுடைய குடும்பத்தினர் பெயருக்கு உரிமை மாற்றம் செய்துள்ளார்.
     இவர் மீது கடந்த ஓர் ஆண்டுக்கும் முன்பே காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
     இந்த மனு மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai