சுடச்சுட

    

    "கர்நாடகத்துக்கு தமிழக லாரிகளை இயக்க வேண்டாம்'

    By நாமக்கல்,  |   Published on : 13th September 2016 08:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடக மாநிலத்துக்கு தமிழக லாரிகளை இயக்க வேண்டாம் என நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.வாங்கிலி கேட்டுக்கொண்டார்.
     இதுகுறித்து அவர் நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:
     காவிரி பிரச்னை காரணமாக கர்நாடகாவில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களுக்கு கண்டனத்தைத் தெரிவித்து கொள்கிறேன். கர்நாடகத்தில் சுமுக நிலை ஏற்படும் வரை அந்த மாநிலத்துக்கு லாரிகளை இயக்க வேண்டாம். கர்நாடகாவில் உள்ள தமிழக லாரிகள், ஓட்டுநர்களுக்கு துணை ராணுவம் மூலம் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
     தமிழக லாரிகள் எரிக்கப்பட்டது தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் முறையிட்டுள்ளோம். அவரும் உரிய நடவடிக்கை விரைந்து எடுப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்னையில் லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார். சங்கச் செயலர் அருள், நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai