கர்நாடக வங்கிக்கு போலீஸ் பாதுகாப்பு
By நாமக்கல், | Published on : 13th September 2016 08:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கர்நாடக மாநிலத்தில் தமிழக வாகனங்கள் தீயிட்டு சேதப்படுத்தப்படும் நிலையில், இரு மாநிலங்களுக்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால் நாமக்கல்லில் கர்நாடக வங்கிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு தரவேண்டிய காவிரி தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடாது என்று கர்நாடகாவில் உள்ள அமைப்புகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் தேடி தேடி தீவைத்து எரிக்கப்படுகின்றன.
இதனால், இரு மாநிலங்களுக்கிடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து நாமக்கல்லில் மோகனூர் சாலையில் இயங்கி வரும் கர்நாடக வங்கிக்கு போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.