Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தல்

    By ராசிபுரம்,  |   Published on : 13th September 2016 08:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என இயற்கை நீர்வளப் பாதுகாப்பு இயக்கத் தலைவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி.ராமலிங்கம், பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
     அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
     தமிழகத்தில் விவசாயிகள் முழுமையாக ஆற்றுப் பாசனத்தை நம்பியே உள்ளனர்.
     முப்போக விவசாயம் செய்த விவசாயிகளுக்கு சமீப காலமாக சம்பா பயிர் மட்டுமே வாழ்வாதாரமாக உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தே தமிழகத்துக்கு தரப்பட வேண்டிய காவிரி நீரைப் பெற்று வருகிறோம்.
     இந்த ஆண்டு கூட கர்நாடக அரசு தமிழகத்துக்கு 94 டி.எம்.சி. தண்ணீர் தந்திருக்க வேண்டும். ஆனால், கர்நாடக அரசு 46 டி.எம்.சி. நீரைதான் வழங்கியுள்ளது. 2013, பிப்.19-ஆம் தேதி காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியானது. அதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆணையம் அமைக்கப்பட்டிருந்தால் இரு மாநிலத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகள் தவிர்க்கப்பட்டிருக்கும்.
     எனவே, தமிழக, கர்நாடக விவசாயிகளின் நலன் கருதி விரைவில் வாரியம் அமைக்க வேண்டுமென அதில் கூறியுள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai